ஆழ்வார்பேட்டையில் கோவிட் கேர் சென்டர் திறக்கப்பட உள்ளது. எம்.எல்.ஏ இந்த திட்டத்தை செயல்படுத்துகிறார். நன்கொடைகள் அவசரமாக தேவை.

ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள எத்திராஜ் கல்யாண மண்டபத்தில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ வும், ஐ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டியும் சேர்ந்து கொரோனா நோயாளிகளுக்காக ‘கோவிட் கேர் சென்டர்’ என்ற மையத்தை தொடங்கவுள்ளனர். இங்கு சுமார் 50 படுக்கைகள் இருக்கும். லேசான கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. அடுத்த வாரம் இந்த மையம் செயல்பட தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுமார் பதினைந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுகிறது, ஒரு ஆக்சிஜன் செறிவூட்டியின் விலை சுமார் 65,000 ரூபாய். ஐந்து செறிவூட்டிகளுக்கு ஐகேர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதவிசெய்கின்றனர். மீதமுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்க நன்கொடைகள் தேவைப்படுகிறது.

நன்கொடைகள் அளிக்க விரும்புபவர்கள் ஐகேர் மல்டி ஸ்பெஷாலிட்டியின் மருத்துவர் கார்த்திக் ஸ்ரீதரை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் :99629 27833. மின்னஞ்சல் முகவரி : care@theicareclinic.com

Verified by ExactMetrics