இந்த குழு மூத்த குடிமக்களுக்கு உணவுகள் மற்றும் மருந்துகள் வழங்குவதில் பிசியாக உள்ளது. தேவை இருப்பின் வாட்ஸ் அப் செய்யுங்கள்.

ஊரடங்கு நேரத்திற்கு முன் இரண்டு இளைஞர்கள் சேர்ந்து இந்த கொரோனா நேரத்தில் மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு சேவையை தொடங்கினர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திகொண்ட மூத்த குடிமக்களுக்கும், லேசான கொரோனா அறிகுறி உள்ளோருக்கும் தேவையான மருந்துகள், உணவுகள் போன்றவற்றை அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களது வீட்டுக்கு விநியோகம் செய்வது. தற்போது இந்த சேவையின் தேவை அதிகரித்துள்ளதாக இந்த சேவையை செய்து வரும் ராகவேந்தர் தெரிவிக்கிறார். எனவே தேவை இருப்பவர்கள் எங்களது வாட்ஸ் அப் எண்ணுக்கு முதல் நாள் இரவே அவர்களது தேவையை குறிப்பிட்டு வாட்ஸ் அப் செய்தால் நாங்கள் அவர்களுக்கு சேவை அளிப்பது எளிதாக இருக்கும் என்று தெரிவிக்கிறார். அவரது வாட்ஸ் அப் எண்: 8610701344.