ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் முதல் நாள் தெப்பத்திருவிழா

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் முதல் நாள் தெப்பத்திருவிழா நேற்று ஜனவரி 28 ம் தேதி நடைபெற்றது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதால் தெப்ப திருவிழாவை காண்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று கோவில் நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று பொதுமக்கள் தெப்பத்திருவிழாவை காண குளத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தெப்பம் இரண்டு சுற்றுகள் குளத்தை சுற்றிவந்த பிறகு, சுமார் ஆயிரம் நபர்களுக்கு மேல் குளத்தை சுற்றியுள்ள மூன்று பகுதிகளில் உள்ளே அனுமதிக்கப்பட்டு தெப்ப திருவிழாவை கண்டு களித்தனர். தெப்ப திருவிழா இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. ஆனால் பொதுமக்கள் நேற்றுபோல் குளத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவார்களா என்ற அதிகாரபூர்வ தகவல் ஏதுமில்லை.

Verified by ExactMetrics