பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் 1971ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு புதிய வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். விழா பிப்ரவரி 1ம் தேதி நடைபெறவுள்ளது.

பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் 1971ம் ஆண்டு படித்த மாணவர்கள் அவர்களின் பொன்விழாவை கொண்டாடுகின்றனர். வருடா வருடம் நடைபெறும் பொன்விழாவில் முன்னாள் மாணவர்கள் சில உதவிகளை பள்ளிக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வருட விழாவில் 1971 ஆண்டு படித்த மாணவர்கள் பள்ளிக்கு புதியதாக கழிப்பறை வசதிகள் செய்தும் மற்றும் சில கட்டிடங்களை சரி செய்தும் தந்துள்ளனர். இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு சிறிய அளவில் நடைபெறவுள்ளது. நீங்கள் இது வரை இந்த 1971 ஆம் ஆண்டின் குழுவில் சேரவில்லையென்றால் இந்த குழுவில் உள்ள லோகநாதனை தொடர்புகொள்ளலாம். தொலைபேசி எண் : 9841759842

Verified by ExactMetrics