மயிலாப்பூரில் நூற்றுக்கணக்கான அ.இ.அ.தி.மு.க தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்தம்

இன்று முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் திறப்பதையொட்டி வெளியூர்களிலிருந்து நிறைய அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்கள் நகருக்குள் காலையிலேயே வந்திருந்தனர். இதில் மயிலாப்பூர் பகுதியில் மூன்று திருமண மண்டபங்களில் தங்கி காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு நிகழ்ச்சி நடைபெறும் மெரினா கடற்கரைக்கு சென்றனர். வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் வெளியூரில் இருந்து வந்த நிறைய அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்கள் நேற்றே இரவே வந்து தங்கியிருந்து காலையில் மெரினா கடற்கரைக்கு சென்றனர். காலையிலிருந்து மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் சர்வீஸ் சாலையில் வெளியூரிலிருந்து வந்த அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதலே கலங்கரை விளக்கம் அருகே போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

Verified by ExactMetrics