மயிலாப்பூர் பகுதிக்கு புதிய துணை கமிஷனர் திஷா மித்தல்

மயிலாப்பூர் மண்டலத்திற்கு சமீபத்தில் புதிய துணை கமிஷனராக திஷா மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய அலுவலகம் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் உள்ளது. இவர் தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்நாட்டில் முதலில் சிவகங்கை மாவட்டத்தில் நவம்பர் 2011ல் பணியில் சேர்ந்தார். அவர் பணியில் சேர்ந்த உடனேயே அவரிடம் பெரிய வழக்கு ஒன்று வழங்கப்பட்டது. இந்த வழக்கு பற்றி தமிழ்நாடே பேசியது. சென்னை உயர்நீதி மன்றமும் சிறப்பு கவனம் செலுத்தி விசாரிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்டத்தில் ஒரு பள்ளியின் முதல்வர் அங்கு படிக்க வந்த மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது சம்பந்தமானது. இதை விசாரிக்க டிஎஸ்பி தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த சிறப்பு குழுவில் திஷா மிட்டல் சிறப்பாக பணியாற்றி ஐந்து மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்தார். ஐந்து வருடங்கள் தொடர் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் குற்றம் செய்தவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. மயிலாப்பூர் புதிய துணை கமிஷனர் அலுவலக தொலைபேசி எண்: 2345 2553 / 2498 2797

<< Photo courtesy daily thanthi >>

Verified by ExactMetrics