தூசி மாசுடன் காணப்படும் லஸ் சர்ச் சாலை

நாகேஸ்வரராவ் பார்க் மற்றும் கற்பகாம்பாள் நகர் ஆகியவற்றுடன் இணையக்கூடிய லஸ் சர்ச் ரோடு பகுதி இப்போது தூசியால் மாசுபட்டுள்ளது.

பஸ்கள், வேன்கள், கார்கள் மற்றும் பைக்குகள் இந்த பகுதிகளில் செல்வதால், பீக் ஹவர்ஸில் இந்தப் பிரச்னை மிக மோசமாக உள்ளது.

TANGEDCO சென்னை மெட்ரோ திட்டத்தில் பணியை எளிதாக்குவதற்காக ஒரு பெரிய மின் கேபிளை மாற்றுவதற்கு பாதைகளை தோண்டி எடுத்தது.

கேபிள் சீரமைக்கப்பட்ட பிறகு பாதைகள் மூடப்பட்டன, ஆனால் இந்த பகுதிகளில் வாகனங்கள் செல்லும்போது மண் மேடுகளால் தூசி பரவுகிறது.

செய்தி: மதன்குமார்