ஆர்.ஏ.புரம் காலனியில் டிச.19ல் மின்னணு கழிவு சேகரிப்பு முகாம்.

உங்களது வீட்டில் உடைந்த கணினிகள் அல்லது மடிக்கணினிகள் அல்லது எலக்ட்ரானிக் பொருட்கள் குப்பையில் போடப்பட வேண்டிய நிலையில் உள்ளதா?

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே.நகரில் டிசம்பர் 19 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் மின்னணு கழிவு சேகரிப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இங்குள்ள திருவீதி அம்மன் கோயில் தெருவில் (அனன்யா குடியிருப்புக்கு எதிரே) உள்ள தக்ஸ்ரா, என்ற உள்ளூர் சமூக சங்கம் மின்னணு கழிவுக்கென வைத்திருக்கும் குப்பைத் தொட்டிகளில் உங்களது மின்னணு கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுவது மட்டுமே.

மேலும் விரிவான தகவலுக்கு பாலாவை 70108 48668 என்ற எண்ணில் அழைக்கவும்.

Verified by ExactMetrics