ஸ்பீக்கர்கள் இல்லாமல் எண்ணெய் விளக்குகளை மட்டுமே கொண்டு விடியற்காலையில் நடைபெறும் மார்கழி கச்சேரிகள்.

மயிலாப்பூர் சாலைத்தெருவில் ஸ்ரீ ஆஞ்சநேய ராகவேந்திரா ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு சில ஆண்டுகளாக, VVS அறக்கட்டளையின் ஏகாந்த சங்கீத சேவை, வயலின் கலைஞர் V V S முராரி அவர்களால் நிர்வகிக்கப்பட்டு, அனைத்து சிறந்த மற்றும் இளம் கலைஞர்களைக் கொண்டு இங்கு இசை விழா நடத்தப்படுகிறது.

கச்சேரிகள் நடைபெறும் இந்த இடம் மிகவும் புனிதமானது. எண்ணெய் விளக்குகள் மட்டுமே உள்ளன. மைக்குகளோ ஸ்பீக்கர்களோ இல்லை. கச்சேரிகள் மிகவும் அமைதியாக இயற்கையான சூழலில் நடைபெறுகிறது. இந்த சீசனின் விழா வெள்ளிக்கிழமை காலை விட்டல் ராமமூர்த்தியின் வயலின் கச்சேரியுடன் தொடங்கியது.

காலை 6 மணிக்குத் தொடங்கும் கச்சேரிகள், 90 நிமிடங்கள் நடைபெறும். இதில் அனைவரும் பங்கேற்கலாம். ஜனவரி 16, 2022 வரை இங்கு கச்சேரிகள் நடைபெறும்.

Verified by ExactMetrics