தேர்தல் 2021: கோவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க அனுமதி. மாலை 6 மணி முதல் 7 மணி வரை.

இன்று மாலை நான்கு மணிமுதல் வாக்குச்சாவடிகளில் சுறுசுறுப்பாக தேர்தலுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. காலையில் வேலைகள் மெதுவாகவே நடந்தது. ஈவிம் இயந்திரம் தவிர மற்ற அனைத்து பொருட்களும் வந்திறங்கிவிட்டது. வாக்குச்சாவடி ஊழியர்களும் வந்துள்ளனர். காவல்துறை ஊழியர்களும் பணியில் உள்ளனர். தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் ஒட்டும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த வேலைகள் இரவுக்குள் முடிந்துவிடும்.

கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வைரஸ் அறிகுறி உள்ளவர்கள், வாக்களிக்க ஆர்வமுள்ளவர்கள் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இது மாலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே.

அரசு வழங்கும் கவச உடை அணிந்து வந்த பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த கவச உடைகள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. வாக்களித்த உடன் கவச உடைகள் திரும்பபெறப்பட்டு அழிக்கப்படும்.

Verified by ExactMetrics