மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜ் அவர்கள் மயிலாப்பூர் பகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
- கலங்கரை விளக்கம் முதல் நந்தனம் வரை புதியதாக வரவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை மக்களுக்கு எவ்வித இடைஞ்சல்களும் இல்லாமல் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- மயிலாப்பூர் மாட வீதிகள் அனைத்தும் அழகுபடுத்தப்படும்.
- வெங்கடேச அக்ரகாரத்தில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டி தெருக்களில் உள்ள அனைத்து காய்கறி கடைகளும் அங்கு மாற்றப்படும்.
- மயிலாப்பூருக்கு நிறைய யாத்திரிகர்கள் வருவதால் அவர்களின் வசதிக்காக இங்கு ஒரு யாத்ரி நிவாஸ் கட்டப்படும்.
- மயிலாப்பூரின் முக்கிய பகுதியில் ஒரு மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டப்படும்.
- பக்கிங்காம் கால்வாய் ஓரமாக வசிக்கும் மக்களின் வசதிக்காக கால்வாயை சுத்தம் செய்ய ஒரு திட்டம்.
- பல்லக்கு மாநகர், விசாலாட்சி தோட்டம், கபாலி தோட்டம் போன்ற பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அங்கு வசிக்கும் அனைத்து மக்களுக்கும் புதிய வீடுகள் வழங்கப்படும்.
- சாலையோரம் உள்ள ஆட்டோ ரிப்பேர் கடைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் கட்டிடங்கள் கட்டித்தரப்படும்.
மேற்கண்ட திட்டங்கள் அதிமுக வேட்பாளர் மயிலாப்பூர் பகுதிக்கு அறிவித்துள்ள முக்கிய திட்டங்களாகும்.