தேர்தல் 2021: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலுவின் தேர்தல் அறிக்கை

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலு மயிலாப்பூர் பகுதிக்கு அவர் தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

  • 1. பழைய குடிசை மாற்று வாரிய கட்டிடங்களை இடித்துவிட்டு அங்கு வசித்துவரும் அனைத்து மக்களுக்கும் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
  • இங்கு பட்டா இல்லாமல் வசித்து வரும் மக்களுக்கு ஆய்வு செய்து பட்டா வழங்கப்படும்.
  • மயிலாப்பூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிறுத்தம் கட்டிக்கொடுக்கப்படும்.
  • ரேஷன் கடைகள் சிறந்த முறையில் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • ஆதரவற்ற வயது முதிர்ந்தோருக்கான மாதாந்திர உதவித்தொகை மற்றும் விதவைகளுக்கான உதவித்தொகை மற்றும் திருமண நிதிஉதவி திட்டங்கள் போன்றவை அனைத்து மக்களும் துரிதமாக பெற்றிட அதிலுள்ள பிரச்சனைகள் சரிசெய்யப்படும்.
  •  பழைய கோவில்கள் சீரமைக்கப்பட்டு அங்கு தினமும் பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும்.
  • சாந்தோம் குப்பம் பகுதியில் புதியதாக மீன் அங்காடி கட்டித்தரப்படும்.
  • எம்.எல்.ஏ அலுவலகத்தில் மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை சுலபமாக தெரிவிக்கும் வகையில் அதற்கான செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மேற்கண்ட திட்டங்கள் திமுக வேட்பாளர் மயிலாப்பூர் பகுதிக்கு அறிவித்துள்ள முக்கிய திட்டங்களாகும்.

Verified by ExactMetrics