பி.எஸ்.பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் ரத்த தான முகாம். மே 1

மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன் 17வது ஆண்டு ரத்த தான முகாமை மே 1ஆம் தேதி நடத்துகிறது.

திருவல்லிக்கேணி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை (கோஷா மருத்துவமனை) நோயாளிகளின் உதவிக்காக இந்த ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது.

இடம். வாணியர் மண்டபம், கிழக்கு மாட வீதி (ராசி கடை எதிரில்), மயிலாப்பூர்.
மேலும் தொடர்புக்கு 9884655547 / 9677286440 / 9841034348

முகாமில் இரத்த தானம் செய்ய வழக்கமான மற்றும் முதல் முறையாக இரத்த தானம் செய்பவர்கள் வரவேற்கப்படுகிறாரார்கள்.

Verified by ExactMetrics