தொடர்ச்சியாக வரும் பண்டிகைகளுக்காக விற்பனைக்கு வந்துள்ள அரிய வகை மலர்கள்

நாளை யுகாதி (தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு கொண்டாட்டம்) பண்டிகை, பின்னர் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகே உள்ள பூக்கடைக்காரர்கள் இன்று மகிழம்பூ, பாரிஜாதம் மற்றும் சம்பங்கி போன்ற அரியவகை மலர்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்த மலர்களுக்கு பண்டிகை காலங்களில் தேவை அதிகம், என்று பல வருடங்களாக இந்த பகுதியில் மலர் விற்பனை செய்துவரும் லலிதா கூறுகிறார்.

இதற்குமுன் சம்பங்கி மற்றும் மகிழம்பூ சிறிய மாலை ரூ .30 க்கும், பரிஜாதம் மூன்று ரூபாய்க்கும், மல்லிகை ரூ .10 க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று இந்த பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

செய்தி மற்றும் புகைப்படம் : ஐஸ்வர்யா.ஆர்

Verified by ExactMetrics