முன்னாள் திமுக கவுன்சிலர் து.ராமதாஸ் மறைவு

முன்னாள் மெட்ராஸ் கார்ப்பரேஷன் கவுன்சிலர் மற்றும் மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியத்தின் நிர்வாகத் தலைவருமான து.ராமதாஸ் அவர்கள் மார்ச் 29ம் தேதி காலமானார். இவர் மயிலாப்பூர் மண்டலத்தில் திமுகவின் மூத்த தலைவராகவும் இருந்தார்.

1954 இல் பிறந்த ராமதாஸ் திமுகவின் 149 வது வட்ட செயலாளராக இருந்தார், மேலும் 1999 ல் நகர கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியத்தின் நிர்வாகஇயக்குநராகவும் பணியாற்றினார்.

இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆர்.ஏ.புரம் வல்லீஸ்வரன் தோட்டத்தில் வசித்து வந்தார்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் கதிரவன் – 9940304874.