தடுப்பூசி போடும் பணியில் கவனம் செலுத்தி வருவதால் மாநகராட்சியின் பெரும்பாலான கிளினிக்குகள் கொரோனா பரிசோதனை செய்ய தயாராக இல்லை.

தேனாம்பேட்டை மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் சென்னை மாநகராட்சியின் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொண்டு தற்போது கொரோனா பரிசோதனை செய்வீர்களா என்று கேட்டோம். அதில் ஆர் ஏ புரத்தில் உள்ள ஆர்.கே நகர் ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்வதாக கூறினர். சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பொது மக்கள் முதல் மற்றும் இரண்டாம் முறை தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகளவில் வருவதாகவும் சுகாதார ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி போடவே அதிக நேரம் செலவிடுவதால் இப்போதைக்கு கொரோனா பரிசோதனை இங்கு செய்வதில்லை என்று தெரிகின்றனர்.

Verified by ExactMetrics