அபிராமபுரத்தில் ஜூலை 31ல் இலவச தடுப்பூசி முகாம்

அபிராமபுரத்தில் ஜூலை 31ம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 1மணி வரை இலவச தடுப்பூசி போடும் முகாம் நடைபெறுகிறது. மயிலாப்பூர் மந்தைவெளி ஆர்.ஏ. புரம், ஆழ்வார்பேட்டை பகுதி பொதுமக்கள் இந்த தடுப்பூசி முகாமில் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

இந்த தடுப்பூசி முகாமை காவேரி மருத்துவமனையும், ஆர் ஏ புரம் குடியிருப்பாளர்கள் நல சங்கமும்(RAPRA) இணைந்து நடத்துகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே வழங்கப்படவுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட விரும்புபவர்கள் இங்கு வந்து போட்டுக்கொள்ளலாம்.

இந்த முகாமில் முதல் டோஸ் தடுப்பூசி போட வருபவர்கள் தங்களுடைய ஆதார் கார்டையும், இரண்டாவது தடுப்பூசி போட வருபவர்கள் ஆதார்கார்டுடன் முதல் டோஸ் போட்டதற்கான சான்றிதழையும் எடுத்து வரவேண்டும்.

இந்த முகாமில் அனைத்து மக்களும் கலந்து கொள்ளலாம். முற்றிலும் இலவசம்.

முகாம் நடைபெறும் நாள் இடம்: ஜூலை 31, 2021. சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, செயின்ட் மேரிஸ் சாலை, அபிராமபுரம். (மாதா சர்ச் அருகில்)

Verified by ExactMetrics