இலவசமாக சிலம்பம் பயிற்சி பெற்றுவந்த குழந்தைகள், தற்போது விளையாட்டு மைதானத்தை இழந்துள்ளனர்.

ஆர்.ஏ புரம் ப்ரொடீஸ் சாலை மற்றும் ஆர்.கே. மட சாலை, கிரீன் வேஸ் சாலை சந்திப்பிலுள்ள சென்னை மாநகராட்சியின் விளையாட்டு மைதானம் சென்னை மெட்ரோ ரயில் நிலைய பணிகள் தொடங்கப்படவுள்ளதால் சில வாரங்களில் மூடப்படவுள்ளது. இதனால் அந்த பகுதியின் சுமார் ஐம்பது மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் இங்குதான் அவர்களுக்கு சிலம்பம் பயிற்சி கடந்த மூன்று வருடங்களாக ஆதிகேசவன் மற்றும் ஜெகதீசன் ஆகிய இரு சகோதரர்களால் இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது.

வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்புகள் நடத்தியுள்ளனர். தற்போது இந்த விளையாட்டு மைதானத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கவுள்ளதால் விளையாட்டு மைதானத்திற்கு இனிமேல் யாரும் விளையாட வரவேண்டாம் என்று கூறியுள்ளத்தையடுத்து மாணவர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் தற்போது சிலம்பம் பயிற்சியை தொடர வேறொரு இடத்தை தேடி வருகின்றனர்.

Verified by ExactMetrics