ஆர்.ஏ.புரம் அருகே காமராஜ் சாலையில் உள்ள சென்னை கார்பரேஷனின் வார்டு 173 வது அலுவலகம் தினமும் பரபரப்பாகவே இயங்குகிறது. இங்கிருந்துதான் பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் மயிலாப்பூரில் உள்ள முக்கியமான பகுதிகளுக்கு சென்று பணியாற்றுகிறார்கள். இங்கு சுமார் 110க்கும் மேற்பட்ட கோவிட் கேர் ஒப்பந்த பணியாளர்களும் உள்ளனர். இவர்களுக்கு தினமும் தர்மாம்பாள் பூங்காவில் அன்றைய வேலை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெறும். பின்னர் இங்கிருந்து கிளம்பி அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று கோவிட் சம்பந்தமான உடல் வெப்ப பரிசோதனை, யாருக்காவது கோவிட் அறிகுறி உள்ளதா, மற்றும் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்புவது, தனிமைப்படுத்துதலில் இருப்பவர்களின் விவரங்களை சேமிப்பது போன்ற வேலைகளை செய்வார்கள்.
மேலும் இந்த அலுவலகத்திற்கு அருகிலேயே அம்மா கிளினிக்கும் உள்ளது. கோவிட் சூழ்நிலையால் இங்கு பொது மருத்துவம் தற்போது அவ்வளவாக பார்க்கப்படுவதில்லை. நீங்கள் இங்கு வந்து காலை 9.30 மணிக்குள் பரிசோதனை செய்யலாம். இங்கு பணியாற்றும் மருத்துவ குழு பத்துமணிக்கு மேல் வெளியில் உள்ள முகாம்களுக்கு அல்லது தடுப்பூசி போட சென்றுவிடுவார்கள். இது தவிர இந்த பகுதியில் சுமார் மூன்று ஆட்டோக்கள் உள்ளது. மக்கள் இந்த ஆட்டோக்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரிசோதனைக்கு சென்று வர பயன்படுத்துகின்றனர். மேலும் இங்கு ஒரு ஆம்புலென்ஸ் போன்ற வாகனம் உள்ளது. இந்த வாகனம் நோய்தொற்று அதிகமாக இருக்கும் நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆகவே இந்த வார்டு 173ஐ சுற்றிலும் காலை முதல் மதியம் இரண்டு மணிவரை பரபரப்பாகவே காணப்படுகிறது.
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…
ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…
பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…