பருவமழை: சிறுவர்கள், குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்களை மாநகராட்சி நடத்துகிறது

தற்போதுள்ள வானிலை காரணமாக ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை பெற குழந்தைகளுக்காக சென்னை மாநகராட்சி மருத்துவ முகாம்களை நடத்தத் தொடங்கியுள்ளது.

இன்று காலை (டிசம்பர் 13) ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள ஜி.சி.சி நகர்ப்புற சுகாதார மையத்தில் முகாம் தொடங்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், எம்.எல்.ஏ., தா.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

9 மாதங்கள் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் இந்த எளிய ஊசி மூலம் சிகிச்சை பெறலாம்.

இந்த சேவையானது அனைத்து ஜி.சி.சி நகர்ப்புற சுகாதார மையங்களிலும் டிசம்பர் 30 ஆம் தேதி வரை காலை நேரங்களில் பொதுமக்களுக்குக் கிடைக்கும்.

செய்தி: மதன்குமார்

Verified by ExactMetrics