பருவமழை: ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல மாணவர்கள் இலவசமாக பைக்குகளை பழுதுபார்த்து வழங்குகின்றனர். டிசம்பர் .18 வரை மட்டுமே.

மயிலாப்பூர், விவேகானந்தா கல்லூரி அருகே உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், சமீபத்தில் பெய்த மழையில் சேதமடைந்த இரு சக்கர வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவும் வகையில், ஆட்டோமொபைல் சர்வீசிங் முகாம் ஒன்றை அமைத்துள்ளது.

இங்கு ஆட்டோமொபைல் டெக்னாலஜி படிப்பில் சேரும் இளைஞர்கள், மயிலாப்பூர் சர் பி.எஸ்.சிவசுவாமி சாலை எண்.66 இல் அமைந்துள்ள வளாகத்தில் (எலக்ட்ரிக் & பிஎஸ் VI தவிர) இரு சக்கர வாகனங்களை இலவசமாக சர்வீஸ் செய்கிறார்கள்.

ஒரு டிவிஎஸ் ஊழியர் புதன்கிழமை மாணவர்கள் சர்வீஸ் செய்வதை வழிநடத்தினார்.- ஒரு டஜன் பைக்குகள்/ஸ்கூட்டர்கள் இங்கு வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவுவதோடு மட்டுமல்லாமல், தாங்கள் கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்தவும் சிறுவர்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று இல்லத்தில் உள்ள ஒரு துறவி கூறினார்

முகாம் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது.
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

இந்த வசதியைப் பெற முன் பதிவு செய்ய வேண்டும்.

இந்த இணைப்பில் சென்று முன்பதிவு செய்யவும்: https://bit.ly/rkmsh-2w-vehicle-service
உதவிக்கு தொடர்பு எண் : 9786339427 / 9791070737

செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி மற்றும் மதன் குமார்.

Verified by ExactMetrics