தெற்கு மாட வீதியில் காலை நேரங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் மக்கள்.

மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் அவர்களது அன்றாட தேவையான காய்கறிகள் வாங்குவதை தெற்கு மாட வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மேற்கொள்வர். தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய கடைகள் பகல் பன்னிரண்டு மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்துள்ளதால், பெரும்பாலான மக்கள் இயல்பான நாட்கள் போன்று காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். முகக்கவசங்கள் அணிந்திருந்தாலும் அதை சரியான முறையில் அணியவில்லை. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாலும் சிலர் தினமும் இங்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். கொரோனா தொற்று பரவி வரும் நேரத்தில் மக்கள் இதுபோன்று பொறுப்பில்லாமல் வெளியில் சுற்றுவது வேதனையளிப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். நீங்கள் கீழே பார்க்கும் படம் இன்று காலை தெற்கு மாட வீதியில் எடுக்கப்பட்டது.

Verified by ExactMetrics