டாக்டர் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையின் நவீனமயமாக்கப்பட்ட மகப்பேறு வார்டுகள் மோசமான நாட்களை சந்தித்து வருகிறது.

மகப்பேறுக்கு பிரபலம் வாய்ந்த ஆர்.ஏ.புரம் டாக்டர் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு பொது மருத்துவமும் நீண்ட காலமாக இங்கு பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இங்கு பிரசவத்திற்கு தினமும் சுமார் எண்பது நபர்கள் வரை வருவர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக தினமும் சுமார் எட்டு முதல் ஒன்பது நபர்களே மருத்துவம் பார்க்க வருவதாக தெரிவிக்கின்றனர். இங்கு இரண்டு வருடங்களுக்கு முன் கர்ப்பிணி பெண்களுக்கு நவீனமயமாக்கப்பட்ட மகப்பேறு வார்டுகள் ஏற்படுத்தபட்டது.

கொரோனா காரணமாக இதன் திறப்பு விழாவும் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் மருத்துவமனைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு வசதிகள் கொண்ட பிரபலமான மருத்துவமனை தற்போது கொரோனா காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ளதாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

Verified by ExactMetrics