மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் நிவாரண உதவி தொகையை பெற்றுத்தர ஏற்பாடு.

மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட கோரோனா தொற்று உள்ளவர்கள் அவசர உதவிக்கும், அத்தியாவசிய பொருட்கள் (உலர்ந்த உணவு, காய்கறிகள்) வாங்கவும், 80 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தமிழக அரசின் கொரான உதவி தொகையை ரேசன் கடைகளில் பெற்றிட கீழ்கண்ட எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்ய வேண்டும்.

உங்கள் தேவையை 9677243222 க்கு வாட்ஸ்அப் செய்யுங்கள். பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் உங்கள் தேவையை குறிப்பிடவும்.

உலர்ந்த உணவு, காய்கறிகள் மற்றும் வீட்டுத் தேவைகளை ஏற்பாடு செய்வதன் மூலம் மூத்தகுடிமக்களுக்கும், அப்பகுதியில் கோவிட்19-ஆல் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், அவரும் அவரது குழுவினரும் உதவ முடியும் என்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு கூறுகிறார்.

Verified by ExactMetrics