இந்த கோவில் பட்டாச்சாரியார் வருமானமில்லாமல் கஷ்டத்தில் உள்ளார். உதவியை எதிர்பார்க்கிறார்.

மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் கடந்த மாதம் பங்குனி பிரமோற்சவம் நடந்தது. ஆனால் குறைந்த அளவு ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது இந்த கோவில் ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறிய கோவில்களில் பணியாற்றும் பட்டாச்சாரியர்கள் வருமானம் இல்லாமல் கஷ்டத்தில் உள்ளனர். மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் பணியாற்றி வரும் ஐம்பத்தியொரு வயதுடைய வாசுதேவ பட்டாச்சாரியார் கடந்த இருபது நாட்களாக கோவிலில் தினமும் சுமார் மூன்று மணி நேரம் காலை மாலை என இரு வேளைகளிலும் பூஜைகளை தனியொருவராக செய்து வருகிறார். தற்போது இவர் கஷ்டத்தில் உள்ளார். நீங்கள் இந்த மாரி செட்டி தெரு பகுதியில் இருந்தால் வாசுதேவ பட்டாச்சாரியாருக்கு உதவுங்கள்.