தடுப்பூசி போட சுகாதார மையங்களுக்கு குறைந்த அளவிலான மக்களே வருகை.

மயிலாப்பூரில் உள்ள பெரும்பாலான சுகாதார மையங்களில் தற்போது கொரோனா தடுப்பூசி போட வருவோரின் எண்ணிக்கை ஊரடங்கு அமலில் உள்ளதால் மிகவும் குறைவாக காணப்படுகிறது. பெரும்பாலான சுகாதார மையங்களில் இப்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி இருப்பில் உள்ளது. முதல் சுற்று தடுப்பூசி போட விரும்புபவர்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு சுமார் இருபத்தைந்து நபர்களே தடுப்பூசி போட வருகின்றனர். அனைத்து மையங்களிலும் கூட்டம் இல்லாமல் காணப்படுகிறது.

Verified by ExactMetrics