மயிலாப்பூர் பகுதிகளில் கண்டிப்புடன் செயல்படுத்தப்படும் ஊரடங்கு.

ஊரடங்கு மயிலாப்பூர் மற்றும் இதர பிற இடங்களில் மிகவும் கண்டிப்புடன் செயல்படுத்தப்டுகிறது. பெரும்பாலான இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நடந்து சென்றால் கூட போலீசார் விசாரணை நடத்துகின்றனர். மேலும் காய்கறி கடைகள், அரிசி விற்பனை செய்யும் கடைகள் போன்ற கடைகளை பன்னிரெண்டு மணிக்கு மூடும் படி போலீசார் அறிவுறுத்துகின்றனர். இப்போது சில பேக்கரி கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. இங்கு அமர்ந்து சாப்பிட முடியாது. ஆனால் பார்சல் வாங்கி செல்லலாம்.ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ மூலமாகவும் பார்சல் சேவை நடைபெறுவதாக கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.