ஊரடங்கு அமலில் உள்ளதால் தடுப்பூசி போட சுகாதார மையங்களுக்கு மிகவும் குறைவான மக்களே வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி நடத்தி வரும் சுகாதார மையங்களில் நேற்று மற்றும் இன்று கொரோனா தடுப்பூசி போட வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தூரத்திலிருந்து ஆட்டோவில் வருபவர்கள் போலீசாரின் வாகன தணிக்கை இருப்பதால் தடுப்பூசி போட வருவதில்லை என்று பொதுமக்கள் சிலர் தெரிவிக்கின்றனர். ஆழ்வார்பேட்டை மற்றும் அப்பு தெரு சுகாதார மையங்களில் இப்போது கோவாக்சின் தடுப்பூசி இருப்பில் உள்ளது. மற்ற அனைத்து மையங்களிலும் கோவிஷீல்டு இருப்பு உள்ளது. ஆனால் தடுப்பூசி போட சுகாதார மையங்களுக்கு மக்கள் வருவதில்லை.