வைரஸ் பாதிப்புக்குள்ளான மூத்த குடிமக்களுக்கு இலவசமாக உணவை வழங்கி வரும் தன்னார்வ குழுவிற்கு ஒரு பெரிய நன்கொடையை ஒரு மூத்த குடிமகன் வழங்கியுள்ளார்.

கடந்த ஐந்து நாட்களாக ஐ.டி. துறையை சார்ந்த ஒரு குழுவினர் மூத்த குடிமக்களுக்கும் தொற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் காலை சிற்றுண்டியையும் மற்றும் மதிய உணவையும் வழங்கி வந்தனர். இந்த தன்னார்வ குழுவினர் ஒரு நாளைக்கு ஐந்து நபர்கள் முதல் ஏழு நபர்களுக்கு உணவை விநியோகம் செய்து வருகின்றனர். உணவை தயார் செய்ய ஒரு சமையலரை பணியமர்த்தியுள்ளனர். இந்த செய்தியை மயிலாப்பூர் டைம்ஸ் பத்திரிக்கை மூலம் அறிந்த, பஜார் சாலையில் வசித்து வரும் ஒரு பெரியவர் இந்த தன்னார்வ குழுவை வீட்டிற்கு அழைத்து பாராட்டி ரூ.10001 ஐ நன்கொடையாக வழங்கியுள்ளார்.

தன்னார்வ குழுவை தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள்.
வசந்த் : 9566146768 மற்றும் பிரசன்னா : 9500167977

Verified by ExactMetrics