கொரோனா விழிப்புணர்வு மற்றும் இன்று முதல் கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி போலீசார் ட்ரோன் மூலம் அறிவிப்பு

இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதையொட்டி போலீசார் ஆங்காங்கே சாலைகளின் சந்திப்புகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வாகன தணிக்கையின் போது உரிய அனுமதி கடிதம் இல்லாமல் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பினர். அதே நேரத்தில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு கோவிட் சம்பந்தமாக அறிவுரைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டியவற்றை அறிவித்து வந்தனர். ஒரு இடத்தில ட்ரோன் மூலம் அங்கிருக்கும் கடைக்காரர்களுக்கு ஊரடங்கு சம்பந்தமாக கடைபிடிக்க வேண்டியவற்றை தெரிவித்து வந்தனர். இன்றைய வாகன தணிக்கையின் போது போலீசார் அமைதியான முறையில் மக்களிடம் விதிமுறைகளை எடுத்து கூறினர். இது பாராட்டும் விதத்தில் இருந்தது.

Verified by ExactMetrics