மூத்தகுடிமக்களுக்கும் மற்றும் கொரோனாவினால் தனிமைப்படுத்திகொண்டோருக்கும் உணவுகள் மற்றும் மருந்துகளின் விநியோகத்தை இலவசமாக செய்து வரும் ‘வி கேர் மயிலாப்பூர்’ தன்னார்வ குழு.

மந்தைவெளியில் வசித்து வரும் ராகவேந்தர் ஒரு பொறியியல் பட்டதாரி. மேலும் இவர் சாந்தோம் மேல்நிலை பள்ளியில் பயின்றவர் சுமார் ஐந்து வருடங்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பின்பு வேலையை விட்டுவிட்டு புதிதாக தொழில் செய்ய விரும்பினார். ஆனால் சூழ்நிலை சரியில்லாததால் கடந்த மாதம் பி.எஸ் பள்ளிக்கு எதிரே பழச்சாறு கடை தொடங்கி நடத்தி வந்தார்.

தற்போது உள்ள சூழ்நிலையால் இந்த தொழிலை நடத்த முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் ராகவேந்தரும் அவருடைய நண்பரும் சேர்ந்து மயிலாப்பூரில் ‘We Care Mylapore’ என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வீட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கும், மயிலாப்பூர் / மந்தைவெளியில் உள்ள மூத்த குடிமக்களுக்கும் இலவசமாக விநியோகம் செய்வதாக அவர்கள் உறுதியளிக்கிறார்கள்.

நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் செய்ய வேண்டும். அவர்கள் உங்கள் வீட்டருகே வந்து பணத்தை பெற்றுக்கொண்டு தேவைப்படுவோருக்கு தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்குகிறார்கள். ராகவேந்தரை 8610701344 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இது ஒரு இலவச தன்னார்வ சேவையாகும்.

Verified by ExactMetrics