ஊரடங்கின் ஒரு வெள்ளிக்கிழமை மதியம். ஆனால் மந்தைவெளியில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே உள்ள கொட்டகையின் கீழ் பணிபுரியும் இந்த நான்கு பேருக்கும் இது பொருந்தாது. இந்த வேலையை அவர்கள் குறிப்பிட நேரத்திற்கு செய்ய வேண்டும்.
காய்கறி கழிவுகளை எருவாக மாற்றும் பணியில் இந்த நான்கு பேரும் இருக்கிறார்கள்.
இது நகராட்சி அமைப்பின் ஒரு சிறிய திட்டம். இந்த மண்டலத்தின் உர்பேசர் சுமித் ஊழியர்கள் இந்த பகுதியில் சேகரிக்கப்பட்ட காய்கறி கழிவுகளையும், பிளாஸ்டிக்கையும் இந்த கொட்டகையின் ஒரு மூலையில் கொட்டுகிறார்கள்.
நான்கு பேரும் பொருட்களைப் வேலையை பிரித்து செய்கிறார்கள் – இரண்டு பெண்கள் அழுகும் தக்காளி, காலிஃபிளவர் இலைகள் மற்றும் கீரைகளை பிரித்து சிறிய துண்டுகளாக நறுக்குகிறார்கள்.
மற்றொருவர் அதை சிமென்ட் தொட்டிகளில் கொட்டுகிறார். இந்த காய்கறி கழிவுகள் அழுகி உரமாக மாற 45 நாட்களுக்கு மேல் தேவைப்படுகிறது. உண்மையான எருவாக மாற மேலும் 10 நாட்கள் தேவைப்படலாம்.
தயார் செய்யப்பட்ட உரம் இங்கு கிலோ ரூ.20க்கு விற்கப்படுகிறது.