சீனிவாசபுரத்தில் தடுப்பூசி போட வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

மயிலாப்பூர் பட்டினப்பாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற நான்காவது தடுப்பூசி முகாமில் சுமார் ஐம்பது நபர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதற்கு முன் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் சுமார் பத்து/இருபது நபர்கள் மட்டுமே கலந்துகொண்டு தடுப்பூசி போட்டிருந்தனர். இந்த எழுச்சிக்கு உள்ளூர் பகுதியில் உள்ள தி.மு.க உறுப்பினர்களே காரணம் (வீடு வீடாக சென்று தடுப்பூசி போட அறிவுறுத்தினர்) என்று இங்கு கோவிட் கேர் தொழிலாளியாக பணியாற்றிவரும் தீபா தெரிவித்தார்.