சென்னை மாநகராட்சி நடத்தும் கிளினிக்குகளில் இரண்டு நாட்களாக அதிகரித்து காணப்படும் மக்கள் கூட்டம்

சென்னை மாநகராட்சி நடத்தும் தடுப்பூசி போடப்படும் கிளினிக்குகளில் கடந்த இரண்டு நாட்களாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தடுப்பூசிகள் இப்போது குறிப்பிட்ட அளவே வருவதால் மக்கள் காலை எட்டு மணிக்கே வந்துவிடுகின்றனர். அவ்வாறு வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. காலதாமதமாக வருபவர்களை அடுத்தநாள் வருமாறு ஊழியர்கள் கூறுகின்றனர். இரண்டாவது முறை தடுப்பூசி போடவருபவர்கள் மேற்கண்ட காரணங்களால் சில நாட்கள் கழித்து தடுப்பூசி போடும் சூழ்நிலை ஏற்படுகிறது. நீங்கள் தடுப்பூசி போட விரும்பினால் காலை எட்டு மணிக்கு சென்று அங்கிருக்கும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

Verified by ExactMetrics