பி எஸ் சீனியர் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் வி. தினகரன் காலமானார்.

மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி எஸ் சீனியர் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் வி.தினகரன் கடந்த ஏப்ரல் 14ம் தேதி காலமானார். அவருக்கு வயது 56. இவர் இந்த பள்ளியில் படித்த பல மாணவர்களை அவர்களின் பெற்றோர்களிடம் பேசி விளையாட்டில் சிறந்த மாணவர்களாக உருவாக்கினார் என்று முன்னாள் மாணவர்கள் சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வி.தினகரனுக்கு ஒரு நினைவு விழா எடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுவருவதாக பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தினகரன் குடும்பத்தாரிடம் பேச 81480 88543 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும்.

Verified by ExactMetrics