கோடைகாலத்தையொட்டி மயிலாப்பூரில் நுங்கு விற்பனை ஜோர்

கோடைகாலத்தில் தெருக்களில் ஆங்காங்கே இளநீர், நுங்கு, தர்பூசணி போன்றவற்றை விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது திருவள்ளுவர் சிலை அருகே நுங்கு விற்பனை நடைபெறுகின்றது. இங்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் நுங்கு விற்பனை செய்வதாக வியாபாரி சுதாகர் கூறுகிறார். நான்கு நுங்கு ரூபாய் இருபதுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் மயிலாப்பூரில் மார்க்கெட், மற்றும் கோவில் அருகே இன்னும் பல இடங்களில் நுங்கு விற்பனை நடைபெறுகிறது.

Verified by ExactMetrics