அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை

இன்று காலை முதல் மெரினா கடற்கரை முழுவதும் ஆங்காங்கே தடுப்புகள் போட்டு மூடப்பட்டது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன் பொதுமக்கள் கடற்கரைக்குள் விடுமுறை நாட்களில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை குப்பம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு பொதுமக்கள் சென்றனர். தற்போது இங்கும் மக்கள் அனுமதிக்கப்படவில்லை.