இந்த மசூதியில் ரம்ஜான் நோன்பு தொழுகை முடிந்தவுடன் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கின்றனர்.

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜும்மா மசூதியில் கடந்த வாரம் முதல் ரம்ஜான் நோன்பு முஸ்லீம் மக்கள் கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். மாலையில் தொழுகை முடிந்தவுடன் நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது. இந்த மசூதியில் சிறப்பு என்னவென்றால் இங்கு தொழுகை முடிந்தவுடன் மசூதி நிர்வாகிகள் இங்கு வரும் மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் (முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல்) செய்கின்றனர். விழிப்புணர்வு பிரச்சாரம் முடிந்த பிறகே இங்கு நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது.

காணொளி :

Verified by ExactMetrics