‘கொரோனா ஹாட்ஸ்பாட்’டாக அறிவிக்கப்பட்டுள்ள மேலும் சில தெருக்கள்

கடந்த வாரம் முதல் சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டை போல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் தெருக்களை தடுப்புகளை கொண்டு மூடிவருகின்றனர். கடந்த வாரம் செயின்ட் மேரிஸ் தெரு அருகே உள்ள சீனிவாசன் தெரு பூட்டப்பட்டது. அதேபோல் கடந்த சனிக்கிழமை பாலகிருஷ்ணன் தெருவில் கொரோனா தொற்ற்று சிலருக்கு கண்டறியப்பட்டதால் மூடப்பட்டது. மேலும் வாரன் சாலை மற்றும் டாக்டர் ரங்கா சாலையும் மூடப்பட்டது. இந்த பகுதிகளில் இரண்டு மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருந்தாலும் அதே நேரத்தில் யாராவது தொற்றின் அறிகுறி தென்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தாலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு மூடப்பட்டு வருகிறது.

Verified by ExactMetrics