இந்தியா போஸ்ட் பெரிய அளவிலான பார்சல் சேவையை தொடங்க உள்ளது. மயிலாப்பூர் தபால் அலுவலகம் இந்த சேவையை வழங்கவுள்ளது.

35 கிலோகிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட எடையுள்ள சரக்குகளை அனுப்புவதற்காக, இந்திய அஞ்சல் மற்றும் இந்திய ரயில்வே சேர்ந்து கூட்டாக பார்சல் சேவையை (JPP) அறிமுகப்படுத்த உள்ளது.

புத்தகங்கள், பாத்திரங்கள், சிறிய வீட்டு உபயோக பொருட்கள் போன்ற பொருட்களை அனுப்ப விரும்பும் நபர்களுக்கு இந்த சேவை தொடங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களின் கட்டணத்தை விடக் குறைவான கட்டணங்கள், உங்கள் வீட்டிற்கே வந்து பொருட்கள் எடுக்கப்படும் என இந்திய அஞ்சல் கூறுகிறது.

பிப்ரவரி 17 முதல் மயிலாப்பூர் தபால் நிலையத்திலும் இந்த சேவை கிடைக்கும்.

மலிவு விலையைத் தவிர, வீட்டு வாசலில் பிக் அப் மற்றும் டெலிவரி, பாதுகாப்பான பரிமாற்றம் மற்றும் காப்பீடு ஆகியவை ஜேபிபி சேவையின் முக்கிய அம்சங்களாகும் என்று மயிலாப்பூரில் உள்ள இந்திய அஞ்சல் துறையின் ஊழியர் ஒருவர் கூறுகிறார்.

புகைப்படம் : கோப்பு புகைப்படம்

Verified by ExactMetrics