உள்ளூர் தபால் நிலையங்களில் இந்திய மூவர்ணக் கொடி கையிருப்பு இல்லை. மக்கள் ஏமாற்றம்.

இந்திய தேசிய கொடியை ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் வீட்டு மாடிகளில் பறக்கவிடுவதற்காக உள்ளூர் தபால் நிலையங்களுக்குச் கொடிகளை வாங்கச் சென்ற மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கொடிகள் தற்போது ஸ்டாக் இல்லை. ஏனென்றால், கடந்த வாரம் போடப்பட்ட ஆர்டர்களில் நூறு மற்றும் ஆயிரக்கணக்கில் ஆர்டர் செய்த மக்களுக்கு கொடிகள் வழங்கப்பட்டது.

மயிலாப்பூர் தபால் நிலைய ஊழியர் ஒருவர், விரைவில் அதிகளவில் கொடிகள் தபால் நிலையத்திற்கு வரும் என்றும், அவற்றை தனி நபர்களுக்கு விற்க முடியும் என்றும் நம்புவதாக கூறினார். ஒரு கொடியின் விலை ரூ.25.