தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஏழை மாணவர்களின் கல்விக்காக நிதி வழங்குகிறது

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மயிலாப்பூர் பிரிவு பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கியுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு மயிலாப்பூர் பிரிவு தலைவர் பி.ரமணகுமார் தலைமை தாங்கினார்.மேலும் சென்னை மாவட்ட தலைவர் ஜி.ராஜேஷ் நாராயண் மற்றும் WIA தலைவர் பத்மா வெங்கட்ராமன் முன்னிலையில் நடைபெற்றது.

வி.ஆர்.ஜி.ராஜி ஆலோசனையின் பேரில், சென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி, செயலாளர் ஸ்ரீதர் மற்றும் பாஸ்கர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.