இராணி மேரி கல்லூரி வளாகத்தில் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரி (QMC) வளாகத்தில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

இது பிப்ரவரி 7 வரை இநடைபெறவுள்ளது. ஃப்ளட்லைட் வெளிச்சத்திலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இராணி மேரி கல்லூரி அணி உட்பட பல கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன.

பி என் எத்திராஜ முதலியாரின் நினைவாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. சிறந்த அணிகள் மற்றும் வீரர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

கீழே காணப்படுவது இராணி மேரி கல்லூரி கைப்பந்து அணி.

 

Verified by ExactMetrics