விஷு மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி மயிலாப்பூர் மாட வீதிகளில் பூக்கள் மற்றும் பழங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. பூக்களின் விலையை போல பழங்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. விஷு பண்டிகைக்கு பலாப்பழத்தின் தேவை அதிகம் இருக்கிறது. கேரள மக்கள் விஷு பண்டிகைக்காக பலாப்பழங்களை அதிகம் வாங்குவர். கால் கிலோ அறுபது ரூபாய்க்கும் அரை கிலோ நூறு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பலாப்பழங்களின் வரத்து குறைவாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி மற்றும் புகைப்படம் : ஐஸ்வர்யா.ஆர்