கல்வி வாரு தெருவில் போக்குவரத்திற்கு தடை

கல்வி வாரு தெரு முண்டகக்கன்னியம்மன் எம்.ஆர்.டி.எஸ். பக்கிங்ஹாம் கால்வாய் அருகே உள்ள ஒரு தெரு. இது கச்சேரி சாலை வரை உள்ளது. இந்த தெருவில் சாலையை விரிவுபடுத்தி நடைபாதை அமைப்பது மற்றும் சாலையில் செடிகளை வைப்பது போன்ற பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் சாலை மூடப்பட்டுள்ளது. மேலும் இதுதவிர இந்த சாலையில் தடுப்பு சுவரும் கட்டப்படவுள்ளது.

ரயில் பயணிகள் லஸ் சந்திப்பு மற்றும் கபாலீஸ்வரர் கோவில் பகுதியில் இருந்து வருபவர்கள் சுலபமாக இந்த சாலையை பயன்படுத்தி ரயில் நிலையத்திற்கு செல்லலாம். இந்த பணிகள் அனைத்தும் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் கொரோனா காரணமாக தடைப்பட்டிருந்தது. தற்போது இந்த சாலை அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆகவே போக்குவரத்து இந்த சாலையில் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics