தீபாவளிக்கு கருப்பட்டி, மைசூர் பாக், காஜு கட்லி, மெட்ராஸ் மிக்சர் போன்றவை ஆர்.ஏ.புரத்தில் உள்ள இந்த சிறிய கடையில் நல்ல முறையில் விற்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடைகள் வியாபாரம் சுமாராக இருந்தாலும் தங்களுடைய பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அந்த வகையில் ஆர்.ஏ.புரத்தில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் தீபம் ஸ்வீட்ஸ் என்ற கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் மணி ராஜு என்பவர் தீபம் டிபன் கடையை வந்தார். கடந்த வருடம் முதல் இந்த தீபம் ஸ்வீட் கடையை ஆரம்பித்து நன்றாக நடத்தி வருகிறார்.

நீங்கள் இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு காஜு கட்லி, மெட்ராஸ் மிக்ஸர் மற்றும் பாம்பே லட்டு போன்றவற்றை வாங்க விரும்பினால் இங்கு ஆர்டர் செய்யலாம். இது தவிர மூத்த குடிமக்களுக்கென்று சிறப்பாக கருப்பட்டி, மைசூர் பாக் போன்றவையும் தயார் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

ஸ்வீட்ஸ் இந்த கடையிலேயே தயார் செய்கின்றனர். முறுக்கு கைமுறுக்கு போன்றவற்றை வேறொரு இடத்தில தயார் செய்து இங்கு விற்பனை செய்கின்றனர். டோர் டெலிவரியும் செய்யப்படுகிறது.

தீபம் ஸ்வீட்ஸ் தொலைபேசி எண் : 9444130312

Verified by ExactMetrics