மயிலாப்பூர் காவல் துறையினர் அதிகமாக ஷாப்பிங் நடைபெறும் இடங்களுக்கு சென்று தொற்றுநோய் அபாயம் குறித்து பொதுமக்களை அறிவுறுத்தினர்.

மயிலாப்பூர் காவல்துறையும் தன்னார்வலர்களும் சேர்ந்து இந்த கொரோனா காலத்தில் தீபாவளி பண்டிகையை எவ்வாறு பாதுகாப்பாக கொண்டாடுவது என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மயிலாப்பூர் காவல்துறை நேற்று மாட வீதியில் உள்ள துணிக்கடை, பட்டாசு விற்பனை கடை மற்றும் தெருவோர கடைகளில் உள்ள வியாபாரிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும், கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் எடுத்துரைத்தனர். இந்த விழிப்புணர்வின் போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

Verified by ExactMetrics