பள்ளி மாணவர்களிடையே பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு துறையினர்

தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு நடைமுறைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்ற விவரங்களை தீயணைப்பு துறையினர் பரப்பி வருகின்றனர். இது தீபாவளி மற்றும் பண்டிகை நேரங்களில் செய்யும் வழக்கமான நடைமுறையாகும்.

மயிலாப்பூரில் இன்று காலை சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் பள்ளி வளாகத்தில் தீயணைப்புத் துறையின் ஒரு குழுவினர், சிறு தீயை அணைக்கும் விதம் குறித்தும், பட்டாசு கொளுத்தும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.

சில மாணவர்களை அழைத்து தீயை எப்படி அணைப்பது என்ற செய்முறை விளக்கமும் செய்து காண்பித்தனர்.

Verified by ExactMetrics