பட்டினப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் மீன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இங்கு உள்ள மணல் திட்டை பொதுப்பணித்துறை அகற்ற வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை

பட்டினப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் பக்கவாட்டு பகுதியில் ஆற்றில் தண்ணீர் தூய்மையாக வந்துகொண்டிருந்த காலத்தில், உவர்நீர் மீன்வளர்ப்பு விஞ்ஞானிகள், மீன் மற்றும் நண்டுகள் வளர்க்க ஆய்வு செய்து அதில் வெற்றியும் அடைந்தனர். இதன் பயனாக இந்த பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று தெரிவித்து அதற்கான பயிற்சிகளையும் மீனவர்களுக்கு வழங்கி மீன் வளர்ப்பு செய்தனர். ஆனால் காலப்போக்கில் தண்ணீர் தூய்மை பாதிக்கப்பட்டும் குப்பைக்கூளங்கள் அகற்றாமலும் இந்த இடம் பயன்படுத்தப்படாமல் போனது.

எனவே அடையாறு முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டை ஆண்டு முழுவதும் அகற்றி, இங்குள்ள உப்பங்கழியில் மீன்கள் மற்றும் நண்டுகள் நன்றாக இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அடையாறு கழிமுக மண்டலத்தில் உள்ள உவர்நீர் மீன்வளர்ப்பு விஞ்ஞானிகள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் விரும்புகின்றனர்.

CIBA (Central Institute of Brackishwater Aquacultrure) விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், இந்த உப்பங்கழி மண்டலத்தில் மாசுபாடுகள் இருந்தாலும், கடல்நீரின் நிலையான ஓட்டம் மீன்களின் இனப்பெருக்கத்தை அனுமதிக்கிறது, எனவே PWD மணல் திட்டை அவ்வப்போது அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்.

Verified by ExactMetrics