பொங்கல் திருநாளை முன்னிட்டு மயிலாப்பூரில் நடைபெற்ற கோலப்போட்டி.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவில் எதிரே உள்ள கல்லுக்காரன் தெருவில் தை திருநாளை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி அங்கு வசித்து வரும் மக்கள் ஒன்றுகூடி பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

கோலப்போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி என பல்வேறு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது, பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் கோலப்போட்டி நடைபெற்றது.

இந்த கோல போட்டியை மயிலாப்பூர் டைம்ஸ் நடத்தியது.

சிறந்த கோலத்திற்கு மயிலாப்பூர் டைம்ஸ் பத்திரிகையின் நிறுவனர் மற்றும் எடிட்டர் வின்சென்ட் டிசோசா அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

Verified by ExactMetrics